சிங்கை G இராமச்சந்திரன்
சிங்கை G இராமச்சந்திரன்
இராமச்சந்திரன் கோவிந்தராசு என்கிற சிங்கை G இராமச்சந்திரன் அவர்கள் (பிறப்பு – 11 டிசம்பர் 1987) தமிழகத்தின் இளம் அரசியல்வாதியாவார். அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில செயலாளரான இவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 23 மார்ச் 2016 அன்று பணியில் அமர்த்தப்பட்டவர். இவர் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் (PGDM) முதுகலை நிர்வாக மேலாண்மை பட்டப்படிப்பு பயின்றவர்.
சிங்கை G இராமச்சந்திரன் அவர்கள் அஇஅதிமுக- வின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியுடன் மணவிழா கண்ட சிங்கை கோவிந்தராசு – சாவித்திரி தம்பதியினரின் மகன் ஆவார். இவர் கோவையில் பிறந்தவர்.
இராமச்சந்திரன் அவர்களின் தந்தை சிங்கை கோவிந்தராசு அவர்கள் துவக்கத்தில் மில் பணியாளராக பணியாற்றியவர். பின்னர் சிங்காநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுப்பணியை தொடர்ந்த அவர் 1999ல் இம்மண்ணை விட்டு மறைந்தார்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் பெயர் சூட்டப்பட்ட இராமச்சந்திரன் அவர்கள் இளம் வயதிலேயே கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன் தனது பதினெட்டாம் வயதில் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.
கோவையிலேயே வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை பெர்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், டிப்ளமோ (DEEE) பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் (B.E – ECE) பட்டப்படிப்பினை கோவை – பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றார்.
கற்பதில் தீரா ஆர்வமும் திறமையும் கொண்ட இவர் பி.எஸ்.ஜி. கல்லூரியில் பயில்கையில் மாணவர் மன்ற செயலாளராகவும், டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பில் “Best Outgoing student” ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம் – அகமதாபாத்தில் 2013 ஆம் ஆண்டு எம்.பி.ஏ படிப்பினை தொடர்ந்த இவர் அக்கல்வி நிறுவனம் வழங்கும் IIMAverick என்ற கல்வி உதவித்தொகையும் பெற்றுள்ளார். மேலும் ஐ.ஐ.எம்-ல் மாணவர் கவுன்சில் – பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமச்சந்திரன் அவர்கள் பொறியியல் படிப்பினையடுத்து FACE (Focus Academy for Career Enhancement) நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு மேலாளராக (2010 -2013) மூன்றாண்டுகள் பணியாற்றியுள்ளார். இப்பிரிவில் தனது சிறந்த செயல்பாட்டிற்காக “Best Business Development Manager” விருதும் பெற்றுள்ளார்.
தொழில் முனைவரான இராமச்சந்திரன் அவர்கள் நிர்வாக மேலாண்மை (MBA) படிப்பினையடுத்து முதன் முயற்சியாக தமிழகத்தின் தனியார் பொறியியல் கல்லூரியில் Campus Cafe (கேண்டீன்) ஒன்றினைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் கோவையில் Friend-In-Knead எனும் கேக் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணை நிறுவனராக பங்கெடுத்ததோடு அந்நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பொறுப்புகளையும் கவனித்து வந்தார். Friend-In-Knead நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னர் சென்னையில் தற்போது The Social Media Company எனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் & கிரியேட்டிவ் ஏஜென்சி நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.
“இந்தியா – இஸ்ரேல்” உறவை நிலை நாட்டவும், இஸ்ரேலின் நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து அறியவும் இஸ்ரேல் தூதரகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய இளம் அரசியல் தலைவர்களில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டின் “டிஸ்கவர் இஸ்ரேல் – 2018” புரோகிராமில் பங்கேற்றுள்ளார்.
PSG, IIM உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் TEDx உட்பட அனைத்து மேடைகளிலும் “Follow Your Passion” (விருப்பத்தை நோக்கி பயணியுங்கள்) என மாணவர்களை வழிநடத்தும் நல்லுரைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய இவர், உயரிய வேலைவாய்ப்புகளை வழங்கும் ஐ.ஐ.எம் – அகமதாபாத்தின் வளாக நேர்காணலை வேண்டாமென விடுத்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவரது ஆர்வத்தையும் உழைப்பையும் கண்ட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இவரை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில செயலாளராக பணியிலமர்த்தினார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இவரது தலைமையிலான குழு பெரும்பங்காற்றியது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட கட்சிப் பிரிவின் போது தற்போதைய துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு அளித்தார். இதனால் திருமதி சசிகலா நடராஜன் அவர்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவர் கட்சி இணைப்பிற்கு பின்னர் மீண்டும் அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டு பணியினைத் தொடர்ந்து வருகிறார்.
மக்களின் பொது பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், சமுதாய பங்களிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலும் முழுஆர்வத்துடன் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். “உலகின் தலைசிறந்த சொல் – செயல்” என்பதை உறுதியாக நம்பும் சிங்கை G இராமச்சந்திரன் அவர்கள் நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உங்களோடு இணைந்து செயல்பட விழைகிறார்.
வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம் !
வளமான சமுதாயத்தை உருவாக்குவோம் !!